இருமுடித் தொண்டு பொறுப்பான தொண்டு‚ அத்தொண்டு என்றும் வீண் போகாது
இருமுடி செலுத்தினால் மட்டும் போதாது‚ பத்துப் பேருக்குத் தருமம் செய்ய வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கும் சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது இந்த நாட்டிற்கும் நல்லது.
தொடர்ந்து இருமுடி செலுத்து‚ ஒன்பது மாலை போதும்‚ பத்து மாலை போதும்‚ என்று நிறுத்திக் கொள்ளாதே
விரதமிருந்து, கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்குக் காட்சி கொடுப்பேன்.
இருமுடி பிரிக்கும் போது பிரிப்பவர்களும் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கருவறையில் இருமுடி அபிடேகம் செய்யும்போது மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கருவறையின் வாயிற்படியை மறைக்காமல் நின்றபடி அபிடேகம் செய்ய வேண்டும்.
உலகமே சிவப்பாகி, சிவப்பு மஞ்சளாகி, மஞ்சள் பச்சையாக மாறுகின்ற வாய்ப்பைக் கொடுக்க போகிறேன்.
ஆன்மிகம் என்பது எளிமையும் வலிமையும் கொண்டது.
ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உடலை விட்டுப் போகும்.
ஆன்மிகத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால்தான் பலன் கிடைக்கும்.
உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் ஆகிய குணங்கள் ஒருவன் தன்னையே அழித்து விடும்.
இயற்கையில் உருவாகும் கல் அம்மனாகவும், சிவனாகவும் மாறுகிறது.
அதுபோல மனிதனும் முயன்றால் தெய்வமாக மாறலாம்.
மருத்துவம், விவசாயம் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் கடல், ஆகாயம் போன்ற இயற்கை அவசியம்.
ஆன்மிகம், தொண்டு, தருமம் ஆகியவற்றில் சோம்பேறித்தனம் ஏற்பட்டால் அழிவு ஏற்படும்.
ஆலயத்தினால் உனக்குப் பெருமையே தவிர உன்னால் ஆலயத்துக்குப் பெருமை இல்லை.
ஆரம்பத்தில் எப்படி வந்து செயல்பட்டீர்களோ, அவ்வாறே இப்பொழுதும் செயல்பட வேண்டும்.
முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது.
உன்னை நினைக்க வைப்பதும் நான்.
நினைவாக இருப்பதும் நான்தான்.
வெளியில் இருப்பவன் உள்ளே வரமுடியும்.
உள்ளே இருப்பவன் வெளியே போனால் திரும்பி வரமுடியாது.
ஓய்வு நேரத்தை ஆன்மிகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.
ஆன்மிகத்தில் வழிகாட்டியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் பற்றிக் கவலைப்படாமல் எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரே எண்ணம்‚ ஒரே பார்வையில் இருக்க வேண்டும்.உழைப்பு குறைந்து போய் விட்டதால் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
உனது தேவைகள், உனது வேதனைகள், உனது சோதனைகள் ஆகியவற்றை என்னிடம் விட்டு விடு.
ஆன்மா என்ற பாத்திரத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் கூறுவனவற்றைத் தலையாட்டிக் கேட்டால் மட்டும் போதாது. பொறுப்பேற்றுச் செய்யவும் வேண்டும்.உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கும் ஆன்மிகத்தை நீங்கள் பலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பணத்திற்காகச் செய்யும் தொண்டு பிணத்துக்குச் சமம்.
பக்தியோடு செய்யும் தொண்டுதான் உண்மையானது.
தொண்டு செய்யாவிட்டால் துண்டு விழும்.
உண்மையான தொண்டு வெளிச்சத்துக்கு வரும்.
பொய்யான தொண்டு வெளிச்சத்துக்கு வராது.
நீ செய்கிறாய், நான் கொடுக்கிறேன். நான் கொடுப்பதை நீ நான்கு பேருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் யாரையும் கெடுக்கக் கூடாது.
செவ்வாடை அணிபவர்களுக்குச் சேவை மனப்பான்மையும், செவிலித்தாய் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் சந்தோஷத்துடனும், உண்மை உணர்வோடும் தொண்டு, செய்ய வேண்டும்
நீ இருக்கும் வரை வாழ்வதற்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்.
அமைதியாக வாழ்ந்து விட்டுப் போவெளியில் இருப்பவன் உள்ளே வருவான்.
உள்ளே இருப்பவன் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்.கணவன் மனைவியாகப் பொதுத் தொண்டில் ஈடுபடுவது கடினம்.
ஆனாலும் அப்படி ஈடுபட்டால் நல்ல பயன் உண்டு.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் சென்று வழிபட்டாலே பயன் உண்டு.
ஆன்மிகத்தில் தொண்டுதான் முக்கியம்.அடிக்கடி தூசு தட்டுவது போல, தொண்டு, தருமம் உள்ளம் ஆகியவற்றை தட்டி எழுப்ப வேண்டும்.
தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை.ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து.
அம்மா இருக்கிறாள் என்று பாம்பு, தேள் இருக்கும் இடத்தில் கை வைக்கக் கூடாது.